குதிரை லாட நண்டை காக்க புதிய முறை

குதிரை லாட நண்டு (Horseshoe crabs) உயிரினம் டைனோசர் வாழ்ந்த காலம்தொட்டே இந்த உலகில் வாழ்ந்து வரும் உயிரினமாகும். அந்த இனம் இப்போது அழிந்து வருகிறது. குதிரை லாட நண்டின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் அதைப் பற்றி சிங்கப்பூரர்கள் அதிகம் தெரிந்துகொள்ள ஊக்கமூட்டவும் ஏதுவாக 'செம்ப்கார்ப் கடல்துறை பசுமை அலை சுற்றுச்சூழல் பராமரிப்புப் போட்டி' என்ற ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்தப் போட்டியை ஒட்டி மாணவர்களுக்காக ஒரு திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. தொழில்நுட்பக் கல்விக்கழகத்தின் மேற்கு கல்லூரியில் படிக்கும் ஈனுஸ் சோங், 18, என்ற மாணவரும் அவருடைய மூன்று சக மாணவர்களும் 'குதிரை லாட நண்டு இனப்பெருக்க முறை' என்ற ஒரு முறையை வடிவமைத்து உருவாக்கினார்கள். இதற்காக அவர்களுக்கு இந்தத் திட்டத்தின் தொடக்கக் கல்லூரி/ தொழில்நுட்பக் கல்விக்கழகப் பிரிவில் வெற்றிப் பரிசு கிடைத்தது. நேற்று அந்த மாணவர்கள் அதைப் பெற்றுக்கொண்டார்கள். மரீனா மண்டரின் ஹோட்டலில் நேற்று நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள், தொடக்கக்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக்கழக கல்லூரிகள், உயர்கல்வி நிலையங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 69 குழுக்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்: தமிழ்முரசு இ-பேப்பர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!