எல்லா மாணவருக்கும் 2020 முதல் புறப்பாடத்திட்ட முகாம்

சிங்கப்பூரில் 2020 முதல் எல்லா மாணவர்களுக்கும் புறப்பாடத்திட்ட முகாம் அனுபவம் கிடைக்கவிருக் கிறது. ஐந்து பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த 1,000 பேருக்கும் அதிக உயர்நிலை மூன்றாம் வகுப்பு மாண வர்கள், சிங்கப்பூர் புறப்பாடப் பள்ளி யின் ஐந்து நாள் முகாம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இத்தகைய நடவடிக்கைகள் இங்கு எல்லா மாணவர்களுக்கும் கட்டாய மானதாக ஆகவிருக்கின்றன. 'தேசிய புறப்பாட துணிகரச்செயல் கல்விப் பெருந்திட்டம்' என்ற ஒரு திட்டம் ஓராண்டுக்கு முன் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீடு பற்றிய நாடாளுமன்ற விவாதத்தின்போது அறிவிக்கப்பட்டது. இந்த முகாம் அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இடம்பெறுகிறது. சிங்கப்பூர் புறப்பாடப் பள்ளியுடன் சேர்ந்து வடிவமைக்கப்பட்டு சென்ற மாதம் தொடங்கப்பட்ட இந்த முகாம் நடவடிக்கையின் முதல்கட்டத்தை அமைச்சு நேற்று விளக்கியது.

கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங், நேற்று பூலாவ் உபினில் சிங்கப்பூர் புறப்பாடத் திட்ட பள்ளியில் மாணவர் களுடன் கலந்துற வாடினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விவரம்: தமிழ்முரசு இ-பேப்பர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!