மாண்ட இளையருக்கு சமூக ஊடகம் வாயிலாக நண்பர்கள் இரங்கல்

ஆர்ச்சர்ட் செண்ட்ரல் கட்டடத்தின் நான்காவது மாடியி லிருந்து கீழே விழுந்து மாண்ட இளையருக்கு அவரது நண்பர்கள் சமூக ஊடகத்தின் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவர் ஓர் அற்புதமானவர் என்று அவர்கள் தங்களது இரங்கல் செய்தியில் புகழாரம் சூட்டியுள்ளனர். ஜோனதன் சோவ் ஹுவா குவாங் எனப்படும் 17 வயது இளையர் ஆர்ச்சர்ட் செண்ட்ரல், ஆர்ச்சர்ட் கேட்வே கட்டடங் களை இணைக்கும் பாதையிலிருந்து நேற்று முன்தினம் பிற்பகலில் கீழே விழுந்தார். கட்டடத்திலிருந்து நீண்டிருந்த பகுதியில் தவறி விழுந்த கைபேசியை எடுப்பதற்காக கைப் பிடி மீதேறிய அவர் பலமில்லாத அந்தப்பகுதியில் கால் வைத்தவுடன் கீழே விழுந்ததாக நம்பப்படுகிறது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் அவரை டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனையில் அவர் மாண்டதாக அறிவிக்கப்பட்டது. .

மாண்டவரின் நினைவு களைப் பகிர்ந்து கொண்ட ஃபேஸ்புக் நண்பர்கள். படங்கள்: பேஸ்புக்

விவரம்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!