நாடாளுமன்றச் செய்தி: தண்ணீர் என்பது சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பு அம்சம்

தண்ணீர் என்பது சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பு அம்சம் என்றும் அதற்கான கட்டணம் முழுமையாக நிர்ணயிக்கப்படுதல் அவசியம் என்றும் சுற்றுப்புற, நீர்வள அமைச் சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நாடாளு மன்றத்தில் நேற்று தெரிவித்தார். "தண்ணீர் உற்பத்திக்கான அதி கரித்து வரும் விலை, சுத்திகரிப்பு, நியூவாட்டர், நீர் மீட்புக்கான ஆலை களை உருவாக்குவதுடன் அவற்றை விரிவுபடுத்துவதற்கான செலவு கள், உருவாக்கம், பருவ நிலை மாற் றங்கள் ஆகியன தண்ணீருக்குச் சரியான கட்டணத்தை நிர்ண யிக்கும் அவசரத்தை ஏற்படுத்தி உள்ளன. அத்துடன், தண்ணீர் விநியோகத்தை உறுதிசெய்ய உள் கட்டமைப்புகளை அமைப்பதும் அவசியம்," என்றார் அமைச்சர். வரவுசெலவுத் திட்ட அறிக் கையில் தண்ணீர் கட்டணம் 30% உயரக்கூடும் என்று அறிவிக்கப் பட்ட பின்னர் அது குறித்து முதல் முறையாக மன்றத்தில் பேசினார் அமைச்சர்.

வாளியில் சேகரிக்கப்பட்ட தண்ணீரின் பயன்பாட்டைப் பகிர்வது எப்படி என்று உட்குரோவ் உயர்நிலைப் பள்ளியில் மாணவி ஒருவ ருக்குச் செய்து காண்பித்தார் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மேலும் செய்திகளுக்கு: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!