பணிப்பெண்களுக்கு பயிற்சியளிக்கும் முன்னோடிச் செயல்திட்டம்

சிங்கப்பூரில் கைக்குழந்தைகளுடன் கூடிய குடும்பங்கள் வேலையில் அமர்த்தும் வெளிநாட்டு பணிப்பெண்களுக்குப் புதிய முன்னோடி பயிற்சித் திட்டம் ஒன்று அமல் படுத்தப் படும். இந்தத் திட்டத்தைப் பரிசோதித்து பார்க்க, தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் 'சீட்' கழகம் (SEED Institute), கேகே மகளிர், சிறார் மருத்துவமனையைச் சேர்ந்த சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களுடன் சேர்ந்து செயல்படும் என்று பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தப் பயிற்சி, கைக்குழந்தைகளைப் பணிப்பெண்கள் நன்கு பராமரித்துக்கொள்ள தேவையான அடிப்படை அறிவைப் போதிக்கும். பாதுகாப்பு, சுகாதாரம் பலவும் இதில் கற்றுக்கொடுக்கப் படும் என்று திருவாட்டி டியோ குறிப்பிட்டார். இந்தப் பயிற்சிக்குக் கட்டணம் $310. இது தொடர்ந்து நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் நடக்கும். 20 பேர் கலந்து கொள்ள லாம். ஆதரவு ஆக்ககரமாக இருந்தால் திட்டம் விரிவுபடுத் தப்படும் என்றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!