தற்காப்பு அமைச்சின் புதிய இணையத் தளபத்தியம்

இணையத் தாக்குதல்களுக்கு எதிரான தற்காப்பை வலுவாக்க புதிய இணைய தளபத்தியத்தைத் தற்காப்பு அமைச்சு அமைக்கிறது. அதோடு, நாட்டின் ராணுவக் கட் டமைப்புகளின் பாதுகாப்பில் தேசிய சேவையாளர்கள் கூடுதல் பொறுப்பேற்பார்கள். நாடுகளுக்கு எதிராக வளர்ந்து வரும் இணைய மிரட்டல்களைக் கையாள இது உதவும். குறிப்பாக, சிங்கப்பூர் ஆயுதப்படை கட்டமைப்பு சார்ந்த, தொழில்நுட்பமயமான படையாக உருவெடுத்து வருவ தால் இது பயனளிக்கும். தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்த புதிய இணையத் தள பத்தியம் "இணையத் தற்காப்பு அமைப்பு" என்றழைக்கப்படும். இணையத் தற்காப்பு உத்திகளை யும் கொள்கைகளையும் வகுக்கும் பொறுப்பை அமைப்பு ஏற்கும். ராணுவத்தின் இணையத் தற் காப்பு ஆற்றலை மேம்படுத்தவும், அவசியம் எழும்போது தேசிய இணையப் பாதுகாப்பு அமைப்புக்கு ஆதரவளிக்கவும் புதிய தளபத்தி யம் பொறுப்பேற்கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!