இணையத்தில் கஞ்சா வாங்கியதாக சந்தேகிக்கப்படும் மாணவர் கைது

கஞ்சா போதைப் பொருளை இணையப் பக்கம் ஒன்றிலிருந்து வாங்கியதாக சந்தேகத்தின் பேரில் 26 வயது சீன சிங்கப்பூரர் ஒருவரை மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். சுமார் 136 கிராம் கஞ்சா அடங்கிய பொட்டலம் ஒன்று குறித்து அப்பிரிவுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. போதைப் பொருளை வாங்கிய அந்த ஆடவர் ஒரு மாணவர் என்றும் தமது அடையாளத்தை மறைக்கும் முயற்சியாக அவர் போலி அடையாளத்தைப் பயன்படுத்தினார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆடவரின் இல்லத்தை அதிகாரிகள் சோதனையிட்டபோது 11 'எல்எஸ்டி' மாத்திரைகளுடன் கூடுதலான போதைப் பொருட்களும் சம்பந்தப்பட்ட கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. விசாரணை தொடர்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!