லஞ்சம் வாங்கிய முன்னாள் இயக்குநருக்குச் சிறை

லஞ்சமாக $317,000 மதிக்கத்தக்க பணம் வாங்கியதற்காக ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா நிறு வனத்தின் முன்னாள் இயக்குநர் 38 வயது சோ இயூ மெங்கிற்கு நேற்று 14 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கட்டட மேம்பாட்டுப் பிரிவில் பணியாற்றிய அவர், ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களைப் பரி மாறிக்கொள்ள 2013ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதிக் கும் 2014ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதிக்கும் இடையில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளிடமிருந்து பணம் வாங்கினார். $315,000 மதிப்பிலான பணம் வாங்கிய மூன்று ஊழல் குற்றச் சாட்டுகளை அவர் கடந்த மாதம் ஒப்புக்கொண்டார். அத்து டன், $2,000 லஞ்சம் வாங்கிய ஒரு குற்றச்சாட்டும் குறிப்பிடப் படாத தொகையை லஞ்ச மாக வாங்க முற்பட்ட மூன்று குற்றச்சாட்டு களும் சோ வுக்கு தண்டனை விதிப்பதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!