ஜோ‌ஷுவாவுக்கு எதிராக மேல்முறையீடு இல்லை

தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாள ரான அமெரிக்கர் ஜோ‌ஷுவா ராபின்சனுக்கு அளிக்கப்பட்ட நான்கு ஆண்டுச் சிறைத் தண்டனைக்கு எதிராக தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் மேல் முறையீடு செய்யாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதினைந்து வயதுக்குக் குறைந்த இரண்டு சிறுமியரிடம் பாதுகாப்பற்ற முறையில் பாலியல் உறவு கொண்டதாகவும் அந் தக் காட்சியைத் தனது கைபேசியில் படம்பிடித்து ஆறு வயது சிறுமி யிடம் காண் பித்ததாகவும் அவர் மீது நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. மார்ச் 2ஆம் தேதி நடந்த நீதிமன்ற விசாரணையில் அவர் மீது குற்றம் நிரூபிக்கப் பட்டது. சிறைத் தண்டனையுடன் ஜோ‌ஷு வாவுக்குப் பிரம்படியும் விதிக் கப்பட வேண்டும் என்று பொதுமக்களில் சிலர் கேட்டுக் கொண்டதாக தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் நேற்று தெரிவித்தது. இருப்பினும் இந்த வழக்கு தொடர்பாக நன்கு ஆய்வுசெய்த பின் இத்தண்ட னைக்கு எதிராக மேல்முறையீடு செய்யத் தேவையில்லை என தலைமைச் சட்ட அதிகாரி அலு வலகம் முடிவு செய்துள்ளதாக அந்த அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!