தண்ணீரைச் சிக்கனப்படுத்த இரு புதிய செயல்திட்டங்கள்

தண்ணீரைச் சிக்கனப்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் நட வடிக்கைகளையொட்டி வீடுகளில் இரண்டு புதிய செயல்திட்டங்கள் அமலாகும். அவற்றில் முதலாவது திட்டம் குறைந்த வருமான குடும்பங்களுக்கு உரியது. அதன்படி வீடுகளில் இப்போது இருக்கும் 9 லிட்டர் கழிவறைத் தொட்டிகளுக்குப் பதிலாக சிக் கனமான தொட்டிகள் பொருத்தப் படும். இதனால் 10% தண்ணீர் மாதாமாதம் மிச்சமாகும். புதிதாக கட்டப்படும் 10,000 வீடுகளில் விவேகமான குளியல் அறை தண்ணீர் குழாய்களை அமைப்பது மற்றொரு திட்டம். இந்தச் சாதனங்கள் பயன் படுத்தப்படும் தண்ணீரின் அளவை அப்போதைக்கு அப்போது காட்டும். இரண்டு திட்டங்களையும் பொதுப் பயனீட்டுக் கழகம் அமல் படுத்தும். சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று நாடாளுமன்றத்தில் தமது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது இவற்றை அறிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!