பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள ஒன்றிணையும் சமய அமைப்புகள்

சிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் நேரிட்டால் இங்குள்ள அனைத்து சமய அமைப்புகளை ஒன்றிணைக்கவும் வழிபாட்டு இடங்களைத் தயார்படுத்தவும் இவ்வாண்டு புதிய 'எஸ்ஜிசெக்கி யோர்' (SGSecure) கட்டமைப்பு அமைக்கப் படும். சிங்கப்பூரர்களிடையே மீள் திறன், புரிந்துணர்வை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்று நாடாளு மன்றத்தில் தெரிவித்தார். இன, சமய நன்னம்பிக்கைக் குழுக்களின் பணிக்கு இணையா க இக்கட்டமைப்பு செயல்படும். "எஸ்ஜிசெக்கியோர் இயக்கத்து டன் அனைத்து சமய அமைப்பு களும் இணைந்து இருக்க வேண் டும். அப்போதுதான், தேவை ஏற்படும்போது ஒருவருக்கு ஒருவர் உதவ தயாராக முடியும். "பயங்கர வாதத் தாக்குதலை அடுத்து அமைதியையும் ஒருமைப் பாட்டையும் மக்களிடம் கொண்டு சேர்க்க சமூக, சமயத் தலைவர்கள் பங்க ளிக்க வேண்டும்," என்று திரு வாட்டி ஃபூ கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!