துணைப் பிரதமர் தர்மன்: மின்னிலக்கப் பொருளியல் வாய்ப்புகளைத் தவறவிடாதீர்

தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் மட்டுமின்றி எல்லா நிறுவனங்களுமே மின்னி லக்கப் பொருளியலின் அனுகூலத் தைப் பயன்படுத்திக்கொண்டு உற்பத்தித்திறனைப் பெருக்கி, ஊழியர்களின் சம்பளத்தைக் கூட்ட வேண்டும் என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் வலியுறுத்தி இருக்கிறார். சிங்கப்பூர் கணினிச் சங்கத் தின் 50வது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் வகையில் வெள் ளிக்கிழமை நடந்த விருந்து ஒன்றில் அவர் உரையாற்றினார்.

புத்தாக்கத்தை உலகத்தர அளவுக்கு கைக்கொள்ளும் ஒரு சூழ்நிலையை சிங்கப்பூர் உரு வாக்குகிறது என்றாலும் புதிய தொழில்நுட்பங்கள் பொருளிய லின் இதர துறைகளுக்கும் வேக மாக, பரவலாக, முழுவதுமாக பரவ வேண்டும் என்றார் அவர். இதனைச் செய்ய ஏற்கெனவே சிங்கப்பூர் முயற்சிகளை தொடங்கிவிட்டது என்று அவர் தெரிவித்தார். கணிதம், அறிவிய லில் ஆற்றல்மிக்க ஊழியரணி சிங்கப்பூரின் பேணி வளர்க்கப்படு வதை அவர் சுட்டிக்காட்டினார்.

முழுவிவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!