தலைமைத்துவ பதவிகளை மாதர் ஏற்க மேலும் வாய்ப்பு

சிங்கப்பூர் அரசியலில் பெண்கள் ஈடுபாடு நீண்டகாலமாக அதிக ரித்து வந்திருக்கிறது என்றும் அவர்கள் தலைமைத்துவ பொறுப்பு களை ஏற்பதற்கு இன்னும் பல வாய்ப்புகள் இருப்பதாகவும் நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப் தெரிவித்து இருக்கிறார். மார்சிலிங் சமூக மன்றத்தில் நேற்று நடந்த அனைத்துலக மாதர் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர் களிடையே பேசினார். நாடாளுமன்றத்தில் பெண் களின் பிரதிநிதித்துவம் பெரும் வளர்ச்சி கண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். கடந்த 80களில் பார்க்கையில் நாடாளுமன்றத்தில் ஒரு பெண் உறுப்பினர்கூட இல்லை என்று தெரிவித்த அவர், இப்போது பெண்களின் பிரதிநிதித்துவம் 20 விழுக்காட்டை விட அதிகமாக இருக்கிறது என்றும் இது அனைத் துலக சராசரி அளவைவிட அதி கம் என்றும் குறிப்பிட்டார். திருவாட்டி ஹலிமா, 62, வரும் செப்டம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடிய தகுதி உள்ளவர் என்று பேச்சு அடிபடுகிறது.

நாடாளுமன்ற நாயகரும் மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹலிமா யாக்கோப் (நடுவில்) சமையல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சமையல் குறிப்புகளை வழங்கியவர்களுடன் நிற்கிறார். திருவாட்டி ஹலிமாவின் சமையல் குறிப்புகளும் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!