தங்கப் படிக்கட்டு ‘கலை’ இழந்தது; கைவண்ணத்தை அகற்றினார் பிரியகீதா

லாசால் கலைக்கல்லூரி மாணவி பிரியகீதா தியா தங்கப் படிக்கட்டு களை அகற்றிவிட்டார். அந்த மாணவி உருவாக்கியிருந்த தங்கப் படிக்கட்டு, சிங்கப்பூரில் பொது இடங்களில் கலைகள் இடம்பெறுவது பற்றி பெரும் விவா தத்தைக் கிளப்பிவிட்டது. "தங்கப் படிக்கட்டை உருவாக் கியதும் நான்தான். அதற்கு முடிவுகட்டியதும் நான்தான். இதில் வேறு யாருக்கும் எந்தப் பொறுப்பு மில்லை. சிறு அடையாளம் மட்டும் மிஞ்சி இருக்கிறது," என்று அந்த மாணவி நேற்று ஃபேஸ்புக் பக்கத் தில் தெரிவித்து இருந்தார். சிறு அடையாளம் என்பது கடைசிப் படியில் எஞ்சியிருந்த ஒரு சிறு சதுர தங்க நிறத் தாளைக் குறிப்பதாக இருந்தது. குமாரி பிரியகீதா, 25, தன் னுடைய இறுதிஆண்டு கல்வி செய்முறைப் பயிற்சித் திட்டத்திற் காக, ஜாலான் ராஜாவில் இருக்கும் வீவக புளோக் ஒன்றில் 20வது மாடி படிக்கட்டுகளில் தங்கநிறத் தாட்களை ஒட்டி அந்தக் கலைப் படைப்பை உருவாக்கி இருந்தார்.

ஜாலான் ராஜாவில் இருக்கும் வீவக புளோக் ஒன்றின் 20வது மாடி படிக்கட்டில் லாசால் மாணவி பிரியகீதா தியாவின் தங்கப்படிக்கட்டு இருந்த இடத்தில் ஒரு சிறு சதுர தங்க ஒட்டுத்தாள் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. படம்: பிரியகீதா தியா/ஃபேஸ்புக்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!