நிறுவனர்கள் நினைவிடம்: சிங்கப்பூரரின் கருத்துகளை மேலும் திரட்ட கண்காட்சி

வில்சன் சைலஸ்

நிகழ்காலத்தைப் பார்த்தவாறு கடந்த காலத்தை நினைவுகூரலாம். இயற்கையை ரசித்தவாறு கடந்து வந்த பாதையை அசைபோட நிறுவனர்களின் நினைவிடம் கரையோரப் பூந்தோட்டத்தின் 'பே ஈஸ்ட்' தோட்டத்தில் அமைக்கப் படவேண்டும் என்ற பெரும்பான்மை யினரின் கருத்துக்கேற்ப நினை விடத்திற்கான ஆலோசனைக் குழு கரையோரப் பூந்தோட்டத்தின் 'வாட்டர் வியூ' கூடத்தில் பொதுக் கண்காட்சியை நேற்றுத் தொடங்கி வைத்தது. 'பே ஈஸ்ட்' தோட்டத்தில் நிறு வனர்களுக்கான நினைவிடம் உருவாக்கப்பட்டால் எத்தகைய அனுபவத்தைப் பெறலாம் என்பதை உணர்த்தும் விதமாக அமைந் துள்ள இக்கண்காட்சி நடக்கும் இடத்திலிருந்து சிங்கப்பூரின் விண்ணை முட்டும் உயர்ந்த கட்ட டங்களைக் கண்டு ரசிக்கலாம். இதில் சிங்கப்பூரைச் செதுக்கிய முன்னோடிகளின் அரிய புகைப் படங்களுடன் காணொளிகளும் இடம்பெற்று உள்ளன.

நிறுவனர்களுக்கான நினைவிடத்தின் பொதுக் கண்காட்சியின் தொடக்க விழாவின் கலந்துரை யாடலில் பங்கேற்ற மா. லட்சுமணன் (இடது) நிறுவனர்களுக்கான நினைவிடக் குழுவின் உறுப்பினர் சித்திக் சனிஃப். படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!