நிறுவனங்களின் மின்னிலக்க ஆற்றலை மேம்படுத்த புதிய திட்டம்

சிறிய, நடுத்தர நிறுவனங்கள், குறிப்பாக சில்லறை, உணவு பானத் துறைகள் மின்னிலக்கமய மாகும் முயற்சியில் உதவ சிங்டெல் நிறுவனம் உள்ளூர் பலதுறைத் தொழிற்கல்லூரிகள் உடன் இணைந்து இரு திட்டங்களை அறிவித்துள்ளது. நிறுவனங்கள் வசதிகளையும் வளங்களையும் பயன்படுத்தி இணைய வர்த்தக ஆற்றல்களை அமைத்து சிறந்த முறையில் விளம்பரப் படுத்துவதில் பயிற்சி அளிக்கவுள்ள இந்த பங்கா ளித்துவம் '99% எஸ்எம்இ' எனும் திட்டத்துக்குத் துணை நிற்கும். சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மின்னிலக்க நிபுணர்களை வேலைக்கு அமர்த்துவதில் உதவ நன்யாங் பலதுறைத் தொழிற் கல்லூரியின் சிங்கப்பூர் சில்லறை வர்த்தக கல்விக் கழகத்துடன் சிங்டெல் இணைந்து செயல்படும். சிறிய, நடுத்தர நிறுவனங்கள் இணைய வர்த்தகம், சில்லறை வர்த்தக பகுப்பாய்வு, மின்னிலக்க விளம்பரத் தீர்வுகளைப் பயன் படுத்த அந்த மின்னிலக்க நிபுணர்கள் உதவுவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!