விரைவுச்சாலைகளை இணைக்கும் புதிய சுரங்க வழிப்பாதை திறப்பு

காலாங் - பாய லேபார் விரைவுச் சாலையையும் நிக்கல் ஹைவே நெடுஞ்சாலையையும் இணைக் கும் சுரங்க வழிப்பாதை பணி நிறைவுபெற்று வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் செயல்படத் தொடங் கும். இதன் மூலம் இந்த இரண்டு விரைவுச்சாலைகளிலும் போக்கு வரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 300 மீட்டர் நீளமுள்ள இரண்டு தடங்களைக்கொண்ட இந்த சுரங்க வழிப்பாதை தொடங்கப்படு வது பற்றி நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிவித்தது. காலாங் - பாய லேபார் விரை வுச்சாலையின் வழியாக ஸ்டேடியம் டிரைவ் செல்லும் வாகனங் கள் மிக விரைவில் சென்ற டையலாம். அதேபோல் சிம்ஸ் வே-யில் இருந்து இந்தச் சுரங்க வழிப்பாதையைப் பயன்படுத்தி நிக்கல் ஹைவே அல்லது ஸ்டேடியம் டிரைவ் பகுதிகளுக்கு மிக எளிதாகச் சென்றுவிடமுடியும்.

விரைவுச்சாலைகளை இணைக்கும் புதிய சுரங்க வழிப்பாதையின் நுழைவாயிலைக் காட்டும் இந்தப் படம் நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள காணொளிப் படத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!