பாலர் பள்ளியில் சிவப்புச் சாயம் தெளித்தவர் கைது

கடன் வாங்கியவரின் பிள்ளைகள் பயிலும் பாலர் பள்ளியில் சிவப்புச் சாயம் தெளித்த தாய்லாந்து நாட்டவருக்கு 15 மாதச் சிறைத் தண்டனையும் மூன்று பிரம் படிகளும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதியன்று 'தி பின்னக்கல் அட் டக்ஸ்டனில்' இருக்கும் ஒரு புளோக்கின் மூன்றாவது மாடியில் உள்ள மாடர்ன் மான்ட்டிசோரி பாலர் பள்ளியில் சிவப்புச் சாயம் தெளித்த பிறகு, 33 வயது சம்ரோங் சொம்போப் அங்கிருந்து டாக்சியில் கிளம்பிச் சென்றார். கடன் முதலை ஒருவருக்காகச் செயல்பட்ட சொம்போப், 56 வயது லீ தியோவ் கியோங்குடன் சேர்ந்து அந்தப் பாலர் பள்ளியுடைய குழந்தைப் பராமரிப்பு நிலையத்தின் ஊழியர்களுக்குத் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார்.

பாலர் பள்ளியில் தெளிக்கப்பட்ட சிவப்புச் சாயத்தை அப்புறப்படுத்தும் ஊழியர்கள். படம்: ஷன்மின்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!