சிங்கப்பூரர்கள் நால்வர் மீது தைவானில் குற்றச்சாட்டு

தைவானின் தைப்பே நகரில் இரு மாதர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்டதை அடுத்து கடந்த டிசம்பரில் நான்கு சிங்கப்பூரர் கள் அங்கு கைதானார்கள். அவர்கள் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் நேற்று சுமத்தப்பட்டதாக அரசினர் தரப்பு தெரிவித்தது. அந்த நால்வரும் அடுத்த இரண்டு நாட்களில் நீதிமன்றத் தில் முன்னிலையாவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக ‌ஷிலின் மாவட்டத்தைச் சேர்ந்த சென் ‌ஷி சு என்ற அரசினர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததாக நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. அந்த நால்வருக் கும் வயது 23. அவர்களில் ஒருவர் தைப்பே பல்கலைக் கழகம் ஒன்றில் மாணவர் பரிமாற்றத் திட்டத்தின்கீழ் படிக்கச் சென்றிருந்தார். மற்ற மூவரும் அவரை பார்க்க போயிருந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!