‘மூத்தோர் சுகாதாரப் பராமரிப்பு முறை மாற வேண்டும்’

எதிர்காலத்தில் தாக்குப்பிடிக்கக் கூடிய விதத்தில் சிறந்த, தகுந்த பராமரிப்பை நமது மூத்தோருக்கு வழங்க, சுகாதாரப் பராமரிப்பு முறையை மாற்றியமைக்க வேண் டும் என்று முதியோருக்கான லயன்ஸ் இல்லத்தின் புதிய தாதிமை இல்லத்தைத் திறந்து வைத்தபோது சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் குறிப்பிட்டார். பீஷானில் நேற்று அதிகார பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட அந்த இல்லம், தோ பாயோ ரைஸில் இருந்த இல்லத்திற்குப் பதிலாகத் திறக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய தாதிமை இல்லம் சுமார் $25 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு மாடிக் கட்டடமான இதில் 230 படுக்கைகள் உள்ளன. அந்த இல்லத்தில் தற்போது 185 முதியோர்கள் இருக்கின்றனர். இல்லத்தைத் திறந்துவைத்துப் பேசிய சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், மூப்படையும் மக்கள்தொகை அதிகரிக்கும் காரணத்தால் சுகாதாரப் பராமரிப் புச் சேவைகளின் தேவை அதிகரிக்கும் என்று கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!