நாட்டைப் பாதுகாப்பதன் அவசியம் தேசிய சேவையில் புரிந்தது

சுதாஸகி ராமன்

தமக்குச் சிறு வயதாக இருக்கும் போதே தந்தை தாயார் இருவரும் பிரிந்ததிலிருந்து தமது தாயாரின் வளர்ப்பில் இருந்த ரமேஷ் வேலன், நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்ட தமது அன்னையின் பாரத்தைக் குறைக்க எண்ணி 13 வயதிலேயே கிடைத்த வேலை களைச் செய்து பணம் ஈட்டினார். கல்வியுடன் பணியையும் புரிந்து இளமையில் பல சவால் களைக் கடந்து வந்த 22 வயது ரமேஷ், தற்போது தேசிய சேவை யில் ஈடுபட்டுள்ளார். பயிற்சியில் சிறப்பாகச் செய்த தற்காக சிங்கப்பூர் ஆயுதப்படை யின் தகுதிவாள் விருதைப் பெறும் அளவிற்கு அவர் முன்னேறியுள் ளார். ராணுவத்தின் காலாட்படையில் இருந்த ரமேஷ், அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியில் கடந்த ஒன்பது மாதங்களாகப் பயிற்சி பெற்று சக வீரர்களுடன் சாஃப்டி ராணுவப் பயிலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணி வகுப்பில் கலந்துகொண்டார்.

சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் தகுதி வாள் விருதை ரமேஷ் வேலனும் (இடது), கௌரவ வாள் விருதை தெஸ்வின் சுகுமாறனும் பெற்றனர். படம்: தற்காப்பு அமைச்சு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!