32 வயதில் 10 ஆண்டு சிறை, 12 பிரம்படி

ஆடவர் ஒருவர், 16 வயதினிலேயே கத்தி முனையில் மின்தூக்கியில் ஒரு மாதிடமிருந்து $30 கொள்ளை யடித்தார். அந்த மாதின் கைகளி லும் உடலின் பல பகுதிகளிலும் கத்தியால் அவர் குத்தினார். மார்பிலும் வயிற்றிலும் கத்தியால் குத்தப்பட்ட திருவாட்டி சோ சான் என்ற அந்த 28 வயது மாது மரணம் அடைந்துவிட்டார். திருவாட்டி சோவை தாக்கி கொள்ளையடித்தவர் குணசேகரன் ராமசாமி என்பவர். இவர் 2013 நவம்பர் 17ஆம் தேதி அதாவது கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்ததற் குப் பிறகு 12 ஆண்டுகள் கழித்து ஜூரோங் ஈஸ்ட் அக்கம்பக்க போலிஸ் சாவடியில் சரணடைந்தார். 2001 அக்டோபர் 2ஆம் தேதி திருவாட்டி சோவிடம் கொள்ளை யடித்ததாகவும் அவரைத் தாக்கிய தாகவும் குணசேகரன் ஒப்புக் கொண்டார். குணசேகரன் மீது தொடக்கத்தில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டது. அது காயம் விளைவித்து கொள்ளையடித்த குற்றச்சாட்டாகச் சென்ற ஆண்டு திருத்தப்பட்டது.

திருவாட்டி சோ சான் உடல் காணப்பட்ட மின்தூக்கி தளத்தில் போலிஸ் சோதனை. படம்: ‌ஷின் மின்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!