மற்றவர்களுக்காக உடலுறுதித் தேர்வு: ஆடவருக்குச் சிறை

தனிநபர் உடலுறுதித் தேர்வு தொடர்பான ஒரு ஏமாற்றுத் திட் டத்தின் காரணகர்த்தா என்று கூறப்படும் லிம் சுன் சை என்ற நபருக்கு நேற்று 18 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 2011க்கும் 2014க்கும் இடையில் இக்குற்றச்செயல்களில் ஈடுபட்டார். மொத்தம் $24,700 தொடர்பான 93 குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்கினார். அந்தக் காலகட்டத்தின்போது லிம், 72 தயார்நிலை தேசிய சேவை யாளர்களின் சார்பில் உடலுறுதித் தேர்வில் கலந்துகொண்டார். அவர் நேற்று 20 குற்றச்சாட்டு களின் பேரில் குற்றத்தை ஒப்புக் கொண்டார். எஞ்சிய 73 குற்றச் சாட்டுகளும் தண்டனை விதிக்கப் பட்டபோது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. லிம்மும் நிக்கோலஸ் டான் குன் சுங், 37, கோ புவே மெங், 39, என்ற அவருடைய கூட்டாளி கள் இரண்டு பேரும் பல தேசிய சேவையாளர்களுக்குப் பதிலாக பல்வேறு ராணுவ முகாம்களில் உடலுறுதித் தேர்வில் கலந்து கொண்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!