பிணை பெற்ற 3ஆவது நாளில் சேகர் ரெட்டி மீண்டும் கைது

சென்னை: பிணையில் வெளிவந்த மூன்றாவது நாளே தொழிலதிபர் சேகர் ரெட்டி மீண்டும் கைது செய்யப் பட்டுள்ளார். அமலாக்கத்துறை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண் டுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியது தொடர்பாக கடந்தாண்டு கைதானார் சேகர் ரெட்டி. சென்னையில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற் கொண்டனர். அப்போது லட்சக் கணக்கான புதிய, பழைய ரூபாய் நோட்டுகள் குவியல் குவியலாகச் சிக்கின.

இதையடுத்து அவர் அமலாக்கத்துறை அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது நான்கு கூட்டாளிகளும் கைதாகினர். தொடக்கத்தில் சேகர் ரெட்டிக்கு பிணை வழங்கப்படவில்லை. அவரது கூட்டாளிகளில் இருவருக்கு மட்டும் நிபந்தனை பிணை கிடைத்தது. இதையடுத்து சேகர் ரெட்டி உள் ளிட்ட மூவரும் சிபிஐ நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்ய, அதை விசாரித்த நீதிமன்றம், மூவருக்கும் நிபந்தனை பிணை வழங்கியது. கடந்த 17ஆம் தேதி பிணையில் வெளிவந்த அவரை நேற்று முன்தினம் அமலாக்கப் பிரிவு போலிசார், சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்த குற்றத்தின் பேரில் மீண்டும் கைது செய்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!