மூத்தோருக்கு தரமான சேவை வழங்க புதிய வழிகாட்டிகள் அனைத்து வயதினரையும் உள்ள- டக்கும் ஒரு சமுதாயத்தை உரு- வாக்கும் நோக்கில் மூத்தோருக்கு தரமான சேவைகள் வழங்கும் முயற்சியை ஆதரிக்க இரு திட்டங்கள் தொடங்கி வைக்கப்- பட்டுள்ளன. அதில் முதலாவது, 'சில்வர் இண்டஸ்ட்ரி ஸ்டாண்டர்ட்ஸ் ரோட்மேப்' எனப்படும் மூத்தோ- ருக்கான நீண்டகாலத் தரநிலை திட்டம். மூத்தோருக்கான தேவை களை ஆதரிக்க அடுத்த மூன்று முதல் ஐந்தாண்டுகளில் தரநிலை களை வகுத்து அவற்றை அமல் படுத்த இத்திட்டம் வகைசெய்யும். இரண்டாவது, முதியோர் பயன்படுத்தும் மடிக்கணினி, கைபேசி போன்ற மின்னிலக்க சாதனங்களில் SS 618 எனப்படும் மென்பொருளை வடிவமைப்பதற்- கான வழிகாட்டுதல்களைத் தொகுக்கும் திட்டம்.
தொடர்பு, தகவல் அமைச்சுக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழுத் தலைவரும் சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஸாக்கி முகமது, மூத்தோருக்கான தொழில்துறை தரநிலை திட்ட நிகழ்ச்சியில் புதிய வசதிகளைப் பார்வையிடுகிறார். படம்: பெரித்தா ஹரியான்