சைக்கிள்களைப் பகிர்ந்துகொள்ளும் திட்டம் கைவிடப்பட்டது

தேசிய அளவில் சைக்கிள்களை பகிர்ந்துகொள்வதற்கான திட்டங் கள் கைவிடப்பட்டுவிட்டன. இந்த ஏற்பாடு இந்த மாத இறுதியில் தொடங்கப்படவிருந்தது. ஆனால் நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று 13 நிறுவனங் களைச் சேர்ந்த பேராளர்களைச் சந்தித்து அவர்களிடம் அந்தத் திட்டம் கைவிடப்படுவது பற்றி தெரிவித்தது. சைக்கிள்களைப் பகிர்ந்து கொள்வதற்கான தேசிய திட்டத் தில் இடம்பெறவிருந்த ஏலக்குத்த கையில் கலந்து கொள்ள அந்த 13 நிறுவனங்களும் முன்வந்திருந் தன. உள்ளூர் நிறுவனம் ஒன்றும் சீனாவைச் சேர்ந்த இதர இரண்டு நிறுவனங்களும் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே சிங்கப்பூரில் கடைகளைத் திறந் தன. இந்தச் சூழலில் சைக்கிள் பகிர்வு தேசிய திட்டம் கைவிடப் படுகிறது. ஏலக்குத்தகைப் பெறும் நிறு வனம் ஜூரோங் ஏரி மாவட்டம், மரினா பே, தெம்பனிஸ், பாசிர் ரிஸ் ஆகியவற்றில் சுமார் 2,330 சைக்கிள்களை நிர்வகித்து நடத்த விருந்தன.

சீனாவைச் சேர்ந்த ஒஃபோ எனும் நிறுவனம் தனது சைக்கிள் பகிர்ந்துகொள்ளும் கடையை இவ்வாண்டில் இங்கு திறந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!