சுயநினைவின்றி இருந்த பெண் சீரழிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு

குடிபோதையில் சுயநினைவு இழந்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக 40 வயது ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வரு கிறது. பாதிக்கப்பட்ட பெண் ணுக்கு 22 வயது. இந்தக் குற்றச்செயல் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதியன்று நிகழ்ந்ததாகக் கூறப் படுகிறது. ஸ`க் இரவு விடுதியில் மதுபானம் அருந்தி போதையில் இருந்த அந்தப் பெண்ணை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று பத்திரமாகச் சேர்க்கப் போவதாக ஓங் சூன் ஹெங் அங்கிருந்த நண்பர்களிடம் கூறிய தாக அறியப்படுகிறது.

குடிபோதையில் மயங்கிய அந்தப் பெண்ணும் ஓங்கும் ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்ற காரணத்தினால் யாரும் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அதிகாலை 4 மணி அளவில் மயக்கமுற்ற அந்தப் பெண்ணைத் தூக்கிக்கொண்டு இரவு விடுதி யைவிட்டு ஓங் வெளியேறுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தப் பெண்ணைத் தமது காரின் பின் இருக்கையில் படுக்க வைத்து அங்கிருந்து கிளம்பினார் ஓங். அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் செல்வதற்குப் பதிலாக காரைத் தமது வீட்டுக்கு ஓட்டிச் சென்றார் ஓங். அவரது வீட்டை அடைந்ததும் அப்பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக நம்பப் படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!