880,000 குடும்பங்களுக்கு சேவை, பராமரிப்புக் கட்டண கழிவுகள்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 880,000 குடும்பங்கள், நிதியாண்டு 2017ல் $120 மில்லியன் மதிப்பிலான சேவை, பராமரிப்புக் கட்டணக் கழிவுகளைப் பெறுவர் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. பிப்ரவரியில் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட இந்தக் கழிவு குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவை வழங்கும். இதற்குத் தகுதிபெறும் ஒவ்வொரு குடும்பமும், வீவக வீட்டைப் பொறுத்து ஒன்றரை மாதம் முதல் மூன்றரை மாதம் வரை சேவை, பராமரிப்புக் கட்டணக் கழிவைப் பெறும். உதாரணத்திற்கு, மூவறை, நான்கறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு நான்கு தவணைகளில் மொத்தம் இரண் டரை மாதம் சேவை, பராமரிப்புக் கட்டணக் கழிவைப் பெறும். ஓரறை, ஈரறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் மூன்றரை மாதம் கட்டணக் கழிவை எதிர்பார்க்கலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!