ஸிக்கா கிருமி பரவலைத் தடுக்க கொசுமருந்து

ஹவ்காங்கில் கோவன் அருகே அமைந்துள்ள சைமன் பிளேசில் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் அதிகாரிகள் நேற்றுக் காலை கொசுமருந்து அடிக்கும் பணியை மேற்கொண்டனர். சிங்கப்பூரில் இவ்வாண்டு ஸிக்கா கிருமி பரவிய முதலாவது வட்டாரமாக, நேற்று முன்தினம் அது அறிவிக்கப்பட்டது. நடை பாதையிலும் வடிகாலிலும் அதிகாரிகள் காலை 9.30 மணியளவில் கொசுமருந்து அடிக்கத் தொடங்கினர். சைமன் பிளேசில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு ஸிக்கா கிருமி தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இருவ ரும் கர்ப்பிணிகள் அல்ல என அறியப்படுகிறது. அவ்வட்டாரத்தில் சில டெங்கி சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்களில் சிலர் கவலை தெரிவித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!