கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் சேவை தாமதம்

தானா மேரா எம்ஆர்டி நிலைத்திற்கு அருகே ரயில் ஒன்றில் கோளாறு ஏற்பட்டதில் கிழக்கு=மேற்கு ரயில் பாதையில் ரயில் சேவைகள் நேற்று மாலை உச்ச நேரத்தில் தாமதம் அடைந்தன. அந்த ரயிலில் ஏற்பட்ட கோளாற்றினால் பாசிர் ரிஸ், பாய லேபார் எம்ஆர்டி நிலையங்களுக்கு இடையில் ரயில் சேவைகள் தாமதம் அடைந்தன என்றும் இதனால் பயண நேரம் கூடுதலாக 40 நிமிடங்கள் நீட்டிக்கப்படலாம் என்றும் எஸ்எம்ஆர்டி நிறுவனம் மாலை 6.08 மணிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது. அதற்குச் சற்று பின்னர் 6.38 மணிக்கு அந்நிறுவனம் வெளி யிட்ட பதிவில், பயண நேரம் 20 நிமிடங்கள் நீட்டிக்கப்படக்கூடும் என்று தெரிவித்தது. பின்னர் 6.45 மணிக்கு எஸ்எம்ஆர்டி வெளியிட்ட பதிவில், ரயில் சேவைகள் வழக்க நிலைக்குத் திரும்பியதாகவும் தானா மேரா, பாசிர் ரிஸ் ரயில் நிலையங்களுக்கு இடையே இலவசப் பேருந்துச் சேவைகள் இன்னும் இயங்கி யதாகவும் தெரிவிக்கப் பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!