தேசிய சேவையாளர்களுக்கு இலவச ‘என்எஸ்50 பேஷன்’ அட்டை

தேசிய சேவையின் 50வது ஆண்டை குறிக்கும் வகையில் தேசிய சேவையாளர்கள் அனை வரும் இலவசமாக 'என்எஸ்50 பேஷன் நினைவு அட்டையைப் (NS50 PAssion card ) பெற தகுதி பெறுகிறார்கள். இதனுடன் அவர் களுக்கு ஐந்து உறுப்பியங்களும் கிடைக்கும். இந்த இலவச அட்டைக்கான விண்ணப்ப நிபந்தனைகள் தேசிய சேவையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இவற்றை அவர்கள் சமூக மனமகிழ் மன்றங்களிலும் நீர்நிலை துணிகரச்செயல் நிலை யங்களிலும் பேஷன் கார்டு வியா பாரிகளிடத்திலும் பயன்படுத்த முடியும். இந்த விண்ணப்ப நிபந்தனை கள் தேசிய சேவையாளர்களுக் கான என்எஸ்50 அங்கீகார $100 பற்றுறுதிச் சீட்டுடன் இந்த ஆண்டு கிடைக்கும். தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், உள் துறை அமைச்சர் கா சண்முகம், இரண்டாவது தற்காப்பு அமைச்சர் ஓங் யீ காங் ஆகியோர் நேற்று நடந்த தனித்தனி நிகழ்ச்சிகளில் அங்கீகார பரிசுகளை வழங்கினர்.

சஃப்ரா தோ பாயோவில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், (இடமிருந்து 2வது) பீஷான்= தோ பாயோ குழுத்தொகுதி அடித்தள அமைப்பு ஆலோசகர் சக்தியாண்டி சுப்பாட், (வல மிருந்து 2வது) ஆகியோர் தேசிய சேவையாளர்கள், அவர்களின் குடும்பத்தாருக்கு என்எஸ்50 அங்கீகார பரிசை வழங்கினர். படம்: மக்கள் கழகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!