லீ குவான் இயூ பேட்டிகள் தொடர்பான மேல்முறையீட்டுத் தீர்ப்பு நிறுத்திவைப்பு

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் காலமான லீ குவான் இயூ, தான் அளித்த பேட்டிகள் தொடர்பில் அரசாங்கத்துடன் செய்துகொண் டிருந்த ஓர் உடன்பாடு பற்றிய தீர்ப்புக்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீடு தொடர்பான இறுதி வாதங்களை நேற்று மேல்முறை யீட்டு நீதிமன்றம் செவிமடுத்தது. தீர்ப்பை அந்த மன்றம் ஒத்தி வைத்திருக்கிறது. திரு லீ அளித்த பேட்டிகள் தொடர்பில் அவருடைய உறவினர் களுக்குப் பதிப்புரிமை அதிகாரம் இருக்கிறது என்றும் அதேவேளை யில் அந்தப் பேட்டி பத்திரங்களைப் பாதுகாக்கும் உரிமையோ அவற் றைச் சுதந்திரமாகப் பயன்படுத்து வதற்கான உரிமையோ உறவினர் களுக்கு இல்லை என்றும் உயர்நீதி மன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. அந்தத் தீர்ப்புக்குப் பிறகு திரு லீயின் உறவினர்கள் சென்ற ஆண்டு மேல்முறையீடு செய்தனர். திரு லீ பிரதமராக இருந்தபோது 1980களில் அவர் அரசாங்கத்தின் வாய்மொழி வரலாற்றுத் திட்டம் ஒன்றின் ஓர் அங்கமாக அந்தப் பேட்டிகளை அளித்திருந்தார். திரு லீ அளித்த பேட்டிகளில் அவர் அனுபவித்த, கிரகித்துக்கொண்ட அரசாங்க விவகாரங்களின் விவ ரங்கள் அடங்கியிருப்பதாகத் தெரி விக்கப்பட்டது.

திரு லீ சியன் யாங் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வெளியே வருகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!