1,000 படுக்கைகளுடன் தயாராகும் செங்காங் பொது மருத்துவமனை

அடுத்த ஆண்டு திறக்கப்பட இருக்கும் செங்காங் பொது மருத் துவமனைக்கான கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவு அடையும் கட்டத்தில் உள்ளது. சிங்கப்பூரின் வடகிழக்குப் பகுதியில் வசிப்போரின் மருத் துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை தயா ராகி வருகிறது. எங்கர்வேல் ஸ்திரீட்டில் அமைந்திருக்கும் இந்த மருத் துவமனைக் கட்டடத்துக்குச் சாயும் பூசும் பணி நிறைவடைந்து விட்டது. அதுமட்டுமல்லாது, மருத்துவ மனையின் பிரதான வாசலுக்குச் செல்லும் வழியைக் காட்டும் அறிவிப்புப் பலகைகளும் பொருத் தப்பட்டுள்ளன. செங்காங் பொது மருத்துவ மனைக்குப் பக்கத்தில் 400 படுக்கைகள் கொண்ட செங்காங் சமூக மருத்துவமனையும் அடுத்த ஆண்டு தனது சேவையைத் தொடங்கும். தற்போது அலெக்சாண்டிரா மருத்துவமனையை நிர்வகித்து வரும் செங்காங் சுகாதாரக் குழு செங்காங் பொது மருத்துவ மனையை நிர்வகிக்கும்.

அடுத்த ஆண்டு திறக்கப்படவிருக்கும் செங்காங் பொது மருத்துவமனை. அதற்குப் பக்கத்தில் 400 படுக்கைகள் கொண்ட செங்காங் சமூக மருத்துவமனையும் அடுத்த ஆண்டு திறக்கப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்