உட்லண்ட்ஸ் கடற்பாலத்தில் வாகன, கூட்ட நெரிசல்

பொது விடுமுறை, நீண்ட வார இறுதி ஆகியவற்றைக் கழிக்க சிங்கப்பூரிவிருந்து மலேசியாவுக் குச் சென்ற பயணிகள் வியாழன் இரவிலும் நேற்று காலையிலும் கடும் வாகன மற்றும் கூட்ட நெரிசலைச் சந்தித்தனர். சிங்கப்பூர் குடிநுழைவு, சோத னைச் சாவடி ஆணையக் கட்ட டத்தில் வியாழன் இரவு தொடங் கிய நெரிசல் நேற்றுக் காலை 11 மணி வரை நீடித்தது. அதற்குப் பிறகும் நெரிசல் கடுமையாக இல்லாவிட்டாலும் மிதமாக நீடித்தது என்று வான் பாவ் நாளிதழ் தெரிவித்தது.