ஜூரோங் ஈஸ்ட்டில் போக்குவரத்து அமைப்புகளின் கூட்டு அலுவலகம்

ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையத் தில் உள்ள ஒருங்கிணைந்த வளா கத்தில் போக்குவரத்து அமைச்சு, நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றின் கூட்டு அலுவலகம் அமையவிருக்கிறது. இதுபோன்றதொரு முயற்சி இப்போதுதான் முதல் முறையாக மேற்கொள்ளப்படுகிறது. பலமாடி களைக் கொண்ட இந்த வளாகம் எம்ஆர்டி நிலையத்தையும் உள்ள டக்கியிருக்கும். தலைக்கு மேல் உள்ள எம்ஆர்டி நிலையம், பரபரப் பான பேருந்து சந்திப்பு நிலையம் ஆகியவற்றுக்கு இடையே கட்டுமா னப் பணிகளை மேற்கொள்வது ஒரு பெரிய பொறியியல் சவால் என்றாலும் இடப்பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வு காண இதுவே சிறந்த வழியாகக் கருதப் படுவதாக அறியப்படுகிறது.