அதிபர் டான்: பரிவுமிக்க சமூகமே நமது இலக்கு

ஒற்றுமையைக் கட்டிக்காக்கும் அதே வேளையில் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்பது சிங்கப்பூரின் ‘கம்போங்’ உணர்வை மேலும் வலுப்படுத்தும் என்று அதிபர் டோன் டான் கெங் யாம் தெரிவித்துள்ளார். “பல பொருட்களுடன் பலவித சுவையூட்டிகளையும் சேர்த்து சமைத்தால்தான் பிரியாணி உணவு சுவை மிகுந்ததாக இருக் கும். அதேபோல், ஒரு வலுவான நாட்டுக்குப் பரிவுமிக்க சமூகம் மிகவும் அவசியமானது. அதுவே நமது இலக்காகும்,” என்று டாக்டர் டான் கூறினார். ஜூசியாட் ரோட்டில் உள்ள காலிட் பள்ளிவாசலில் நேற்று முற் பகல் நடைபெற்ற அதிபர் சவால் நன்கொடை பிரியாணி நிகழ்ச்சி யில் அதிபர் டான் சிறப்பு விருந் தினராகக் கலந்துகொண்டு, பிரி யாணி சமையலிலும் பங்கேற்றார்.

காலிட் பள்ளிவாசலில் நேற்று முற்பகல் நடைபெற்ற அதிபர் சவால் நன்கொடை பிரியாணி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அதிபர் டோனி டான் கெங் யாம் (நடுவில்) பிரியாணி சாதத்தைக் கிளறுகிறார். (இடமிருந்து) சிங்கப்பூர் முஃப்தி டாக்டர் முகம்மது ஃபட்ரிஸ் பக்காரம், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் நிரந்தரச் செயலாளர் இயோ சீ யான், காலிட் பள்ளிவாசல் தலைவர் அலாவுதின் முகம்மது, முயிஸின் தலைமை நிர்வாகி அப்துல் ரசாக் மரிக்கார். படம்: பெரித்தா ஹரியான்