எல்சிடி திரையுடன் புதிய ரயில் சேவை தொடக்கம்

பயண விவரங்களைத் தரும் எல்சிடி திரைகளைக் கொண்ட முதல் ரயில் நேற்று வடக்கு- தெற்கு ரயில் பாதையில் முன் னோட்டப் பயணத்தைத் தொடங் கியது. வடக்கு = தெற்கு, கிழக்கு - மேற்கு ரயில் பாதையில் செயல் பட இருக்கும் 57 புதிய ரயில் களில் இது முதலாவது. புதிய சமிக்ஞை முறைகளைக் கொண்ட இந்த ரயில்கள், முதன் முதலில் எல்சிடி திரைகளைக் கொண்டிருக்கும் ரயில்கள் என்ற சிறப்பையும் பெற்றுள்ளன. ரயிலின் கதவுகளுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள இத்திரைகளில் அடுத்து வரும் நிலையம், அடுத்த நிலையத்திலுள்ள வெளியேறும் பாதைகள், அந்த நிலையத் துக்கு அருகிலுள்ள சுற்றுலா இடங்கள், பாதுகாப்புத் தகவல்கள் போன்ற விவரங்கள் இடம்பெறும். அத்துடன் சக்கர நாற்காலிப் பயணிகளுக்கான இடங்களும் நீல நிறத்தில் தெளிவாக அடை யாளமிடப்பட்டுள்ளன. ரயிலின் மத்திய பகுதியில் உள்ள இரு பெட்டிகளில் சக்கர நாற்காலி பயணிகளுக்காக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ரயிலின் கதவுகளுக்கு மேல் அமைக்கப்பட் டுள்ள எல்சிடி திரை களில் அடுத்து வரும் நிலையம், அடுத்த நிலையத்தின் வெளி யேறும் பாதை, அந்த நிலையத் துக்கு அருகிலுள்ள சுற்றுலா இடங்கள், பாது காப்புத் தகவல்கள் போன்றவை இடம்பெறும். படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!