அப்பர் ஜூரோங் ரோட்டில் வேரோடு சரிந்த பெருமரம்

அப்பர் ஜூரோங் ரோட்டில் நேற்று முன்தினம் பெரிய மரம் ஒன்று வேரோடு சரிந்ததில் சிங்கப்பூர் டிஸ்கவரி சென்டருக்கு அருகே யிருந்த கூரை வேயப்பட்ட நடைபாதை சேதமானது. பேருந்து நிறுத்துமிடத்துக்கு அருகே சாலையின் குறுக்கே விழுந்த அந்த மரம் சாலையை முழுவதுமாக முடக்கியது. வேரோடு சரிந்த மரம் பேருந்து நிலையத்தின் அருகேயிருந்த நடைபாதையின் கூரையைப் பெயர்த்திருப்பதைப் படங்கள் காட்டின. அன்று பிற்பகலில் அந்தப் பாதை வழியாகச் சென்ற திரு சான், "அது பெரிய ராட்சத மரம்" என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் விவரித்தார். ஜூரோங் பாயிண்டை நோக்கிச் செல்லும் அப்பர் ஜூரோங் சாலையை குறுக்குவாட்டில் முழு வதுமாக அடைத்துக்கொண்டு மரம் விழுந்து கிடந்ததாக அவர் கூறினார்.

வேரோடு பெயர்ந்து விழுந்து கிடக்கும் மரமும் அதனால் சேதமடைந்திருக்கும் நடைபாதைக் கூரையும். படம்: ஸ்டோம்ப்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!