பெருமாள் கோவிலில் சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டம்

சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் சிங்கள பௌத்த சங்கம் ஏற்பாட் டில் நேற்று முன்தினம் சிங்கள புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இலங்கையின் நாடாளுமன் றச் சீரமைப்பு, ஊடகத் துறை துணை அமைச்சர் கருணரத்னா பரணவிதான, சிங்கப்பூருக்கான இலங்கை தூதர் நிர்மல் வீரரத்னா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்து ஆலையத்தில் நடந்த பௌத்த சமயக் கொண்டாட்டம் சிங்கப்பூரின் பல சமய நல்லிணக்கத்தைப் பறைசாற்றுவதாக இருந்தது. தென்கிழக்கு மாவட்ட மேயரான டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான், இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பித்தார். சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கைச் சமூகத் தினரும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். இலங்கையிலிருந்து வந்திருந்த கலாசாரக் குழுவினர் நிகழ்ச்சிகளைப் படைத்துச் சிறப்பித்தனர். படம்: டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் ஃபேஸ்புக் பக்கம்