ஒத்மானுக்குப் பிரியாவிடை

சிங்கப்பூரின் முன்னோடித் தலை வர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஒத்மான் வோக்கிற்கு நேற்று சிங்கப்பூர் பிரியாவிடை கொடுத்தது. திரு ஒத்மான் திங்கட்கிழமை 92வது வயதில் காலமானார். அவரது நல்லுடல் நேற்று மதிய நேரத்தில் அவருடைய வீட்டி லிருந்து நார்த் பிரிட்ஜ் ரோட்டில் இருக்கும் சுல்தான் பள்ளிவாச லுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அங்கு தொழுகை நடத்தப்பட்டது. பிறகு அங்கு அவருடைய நல் லுடல் வைக்கப்பட்டு இருந்த பெட் டியின் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டது. மரணம் அடைந்துவிட்ட சிங்கப் பூரர் ஒருவருக்குக் கிடைக்கும் ஆக உயரிய கௌரவம் இதுதான். பிறகு திரு ஒத்மானின் நல்லுடல் தாங்கிய பெட்டி சடங்கு பூர்வமான பீரங்கி வண்டியில் வைக்கப்பட்டது. அங்கிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு நாட்டின் முக்கிய பகுதி கள் வழியாக சுவா சூங் காங் முஸ்லிம் நல்லடக்க மையத்துக்குச் சென்றது. அங்கு நேற்று பிற்பகல் நேரத்தில் திரு ஒத்மான் நல்லடக் கம் செய்யப்பட்டார்.

திரு ஒத்மான் வோக்கின் நல்லுடல் ஏற்றப்பட்ட பீரங்கி வண்டி இறுதி ஊர்வலமாக நாடாளுமன்றத்தைக் கடந்து செல்கிறது. படம்: பெரித்தா ஹரியான்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!