செகார் ரோட்டில் குரங்கு தொல்லை

புக்கிட் பாஞ்சாங்கில் இருக்கும் செகார் வட்டாரத்தில் குரங்கு தொல்லை பெரும் பிரச்சினையாக உள்ளது என்றும் குரங்குகள் தாக்கிவிட்டதாகவும் சென்ற ஆண்டு அக்டோபர் முதல் 160 புகார்கள் வந்திருப்பதாக சிங்கப்பூர் வேளாண்- உணவு கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகையால் அந்தப் பகுதியில் குரங்கு தொல்லை பொது பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய நிலையில் இருக்கிறது என்று ஆணையம் தெரிவித்தது. செகாரில் உள்ள வீடுகளுக்குள் இரண்டு குரங்குகள் நுழைந்துவிட்டதாகவும் அவற்றில் ஒரு குரங்கு சென்ற ஆண்டு நவம்பர் மாதம் பிடிபட்டுவிட்டதாகவும் மற்றொரு குரங்கு இன்னமும் மூர்க்கமாகத் திரிந்துவருவதாகவும் ஹாலாண்ட்-புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா கூறினார். குரங்கு கடித்ததால் முதிய ஆடவர் ஒருவர் திங்கட் கிழமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது பற்றி தனக்குத் தெரியும் என்றும் இது பற்றி புலன்விசாரணை நடப்பதாகவும் ஆணையம் கூறியுள்ளது. குரங்குகள் பொதுமக்களுக்கு நோய்களை ஏற்படுத்திவிட முடியும் என்றும் மூர்க்கமான குரங்குகள் பொதுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்திவிட முடியும் என்றும் ஆணையம் எச்சரித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!