அமெரிக்க நிறுவனம் US$100 மி. முதலீடு; மின்னிலக்கப் புத்தாக்க நிலையம் அமையும்

அமெரிக்காவின் பயனீட்டுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவன மான புரொக்டர் & கேம்பல் (பி&ஜி) நிறுவனம், தன்னுடைய முதலாவது மின்னிலக்கப் புத்தாக்க நிலை யத்தை சிங்கப்பூரில் அமைக்கிறது. இந்த நிலையத்தில் அது அடுத்த ஐந்தாண்டுகளில் US$100 மில்லி யன் தொகையை முதலீடு செய்யும். பொருளியல் வளர்ச்சிக் கழகத் துடன் சேர்ந்து அமெரிக்க நிறு வனம் இந்த முதலீட்டைச் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடு, பி&ஜி நிறுவனம் சிங்கப்பூரில் கொண்டிருக்கும் கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்து கிறது. உலகில் மின்னிலக்க மற்றும் இணைய வர்த்தக மையம் என்ற சிங்கப்பூரின் நிலையை இந்த முதலீடு பலப்படுத்துகிறது. பி&ஜி நிறுவனம் சிங்கப்பூரில் அமைக்கவிருக்கும் புத்தாக்க நிலையத்திற்கு 'சிங்கப்பூர் இ-சென்டர்' என்று பெயர். இதுவே இந்த பன்னாட்டு நிறு வனம் அமெரிக்காவுக்கு வெளியே அமைக்கும் முதலாவது நிறுவன மாகும். இது மூன்று முக்கிய துறைகளில் மின்னிலக்கப் புத் தாக்கத்தை விரிவுபடுத்தும். பொருட்கள் விநியோகத் துறை நிர்வாகம், மின்னியல் பகுப்பாய் வுகள், இணைய வர்த்தகம் ஆகி யவை அந்தத் துறைகள். இந்தப் புதிய நிலையம் நேற்று தொடங்கப் பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!