கடும் மழை, திடீர் வெள்ளத்தால் இடிந்த சுவர்

சிங்கப்பூரில் நேற்றுப் பிற்பகல் 1.35 மணி முதல் 2.25 மணி வரை கடும் மழை பெய்ததன் காரணமாக பல பகுதிகளிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. கார்கள் பாதி சக்கரம் மூழ்கிய நிலையில் செல்ல வேண்டியதாயிற்று. எக்சிட்டர் ரோடு, சாமர்செட் ரோடு, கஸ்கேடன் ரோடு, தோம் லின்சன் ரோடு, ஸ்டீவன்ஸ் ரோடு, பால்மோரல் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் பிற்பகலில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று தேசிய சுற்றுப்புற வாரியத்தை மேற்கோள் காட்டி பொதுப் பயனீட்டுக் கழகம் எச்சரித்தது. இதற்கிடையே, ஸ்டீவன்ஸ் ரோட்டை அடுத்துள்ள டெல்வி ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் மதில் சுவர் மழை, வெள்ளம் கார ணமாக இடிந்தது. டெல்வி ரோடு எண் 64, 66, 68 வீடுகளுக்கு வெளியே சுவர் பகுதிகள் ரோட்டில் சிதறிக் கிடக் கும் படங்கள் ஸ்டோம்ப் இணையத் தளத்தில் வெளிவந்தன.

திடீர் வெள்ளத்தால் டெல்வி ரோட்டில் உள்ள ஒரு வீட்டின் மதில் சுவரின் இடிந்த பகுதிகள் சாலையில் சிதறிக் கிடக்கின்றன. படம்: ஸ்டோம்ப்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!