விளையாட்டு, கதைகள் மூலம் தமிழ் மொழியை குழந்தைகளிடம் வளர்த்தல்

ஐஸ்வர்யா மாணிக்கவாசகம்

ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமானால், அந்தக் கதா பாத்திரமாகவே மாறினால்தான் அதன் தன்மையைப் பார்வையாளர் கள் உணர முடியும். அதேபோல், குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கவேண்டுமானால் பெற்றோர் குழந்தைகளாகவே அவர்களுடன் பழகினால்தான் அது சாத்தியமாகும் என்பதை பெற்றோர் அவர்களுக்காக நடத் தப்பட்ட பயிலரங்கில் கற்றுக் கொண்டனர். இம்மாதம் 15ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை விளையாட்டு மற்றும் கதைகளின் மூலம் தமிழ் மொழி யைப் பிள்ளைகள் விரும்பும் வகை யில் எவ்வாறு கொண்டு சேர்க்க லாம் என்பதைக் கற்றுக் கொடுப்ப தற்காக கல்சா பாலர் பள்ளி ஆசிரியர்கள் நடத்திய பயிலரங் கில் 16 பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்.

பெற்றோர்களுக்கான பயிலரங்கில் அவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள். படம்: கல்சா பாலர் பள்ளி