செங்காங் மருத்துவமனை வளாக கட்டுமானத் தளத்தில் பாரந்தூக்கி சாய்ந்தது

செங்காங் மருத்துவமனை வளா கத்தின் கட்டுமானத் தளத்தில் நேற்று முன்தினம் பாரந்தூக்கி ஒன்று கான்கிரிட் வாளியை உயரே தூக்கும்போது, பக்கவாட் டில் சாய்ந்தது. மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட தனது அறிக்கையில் இச்சம்பவம் பற்றி தெரிவித்தது. ஏங்கர்வேல் ஸ்திரீட்டில் உள்ள இந்தக் கட்டுமானத் தள விபத்து குறித்து தனது தகவல் தெரிவிக் கப்பட்டது என்று கூறிய அமைச்சு இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை என்றும் சொன்னது. செங் லிம் எல்ஆர்டி நிலையத் துக்கு அருகில் பாரந்தூக்கி ஒன்று பக்கவாட்டில் சாய்ந்து கிடக்கும் படங்கள் ஸ்டோம்ப் இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. அந்தக் கட்டுமானப் பணி களை பெண்டா-ஓ‌ஷியன் கட்டு மான நிறுவனம் ஏற்று நடத்துகி றது என்று தெரிவித்த அமைச்சு, விபத்து நிகழ்ந்ததற்கான கார ணத்தை தனது அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள் என்றும் கூறியது.

சாய்ந்து கிடக்கும் பாரந்தூக்கி. படம்: ஸ்டோம்ப்°

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!