ரூ.50 லட்சம் மதிப்புள்ள மென்பொருள் திருட்டு: இளையர் மீது புகார்

திண்டுக்கல்: மென்பொருள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஜஸ்லின் சந்தோஷ் என்பவர் அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அளித்துள்ள புகாரில், தமக்குச் சொந்தமான நிறுவனத்தில் பழனியைச் சேர்ந்த மாயக்கண்ணன் என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். "கடந்த 2016ஆம் ஆண்டு எனது நிறுவனத்தில் இருந்து விலகினார் மாயக்கண்ணன். அப்போது எங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமான மென்பொருளை அவர் திருடியுள்ளார். பின்னர் பல்வேறு நிறுவனங்களுக்கு அதை விற்றுள்ளார். அந்த மென்பொருளின் சந்தை மதிப்பு 50 லட்சம் ரூபாய் ஆகும். எனவே மாயக்கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்," என சந்தோஷ் வலியுறுத்தி உள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!