பள்ளிகளை இணைக்க வேண்டியதன் அவசியம்

கல்வி அமைச்சின் திட்டம் பற்றி பலதரப்பட்ட கருத்துகள் முன்வைக் கப் பட்டுள்ளதில் தொடக்கக் கல்லூரிகளை இணைப்பதன் மூலம் கல்லூரியின் தரம் குறைந்து விடலாம் என்ற அச்சம் இருக்கிறது என்றார் ஆன்டர்சன் தொடக்கக் கல்லூரியின் முன்னாள் மாணவி ஐஸ்வர்யா சுப்பிரமணியன், 21. "கல்லூரிக்கு மறுபடியும் திரும்பிச் செல்லும்போது அதே பழைய உணர்வு கிடைக்காது," என்ற ஐஸ்வர்யா, ஆன்டர்சன் தொடக்கக் கல்லூரி வளாகத்துடன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி இணைக்கப்படுவதை வரவேற்றார். குறைந்து வரும் பிறப்பு விகிதம் தொடக்கக் கல்லூரிகள் இணைய காரணமாக இருந்தாலும் பெரும் பாலான இளையர்களும் பலதுறைத் தொழிற்கல்லூரிகளுக்குச் செல் வதும் மற்றொரு காரணமாக இருக் கலாம் என தான் நம்புவதாக அவர் சொன்னார். தொடக்கக் கல்லூரிகளை ஒன்றிணைக்கும்போதும் மாணவர்களுக்கான இடங்கள் குறையும் என்றும் இதனால் போட்டித்தன்மை அதிகரிக்கலாம் என்றும் கூறினார் தந்தையான திரு ஜூட்ஸ் ராபின், 43.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!