வடகொரியாவை சாடிய சீனா, அமெரிக்காவை பாராட்டியது

பியோங்யாங்: வடகொரியாவின் அண்மைய அணுவாயுத நட வடிக்கைகள் தொடர்பில் அந் நாட்டை அதன் நட்பு நாடான சீனா குறை கூறியுள்ளது. அதே சமயம் வடகொரிய விவகாரம் குறித்து அமெரிக்கா அண்மையில் வெளியிட்ட அறிக்கைகளை சீனா பாராட்டி உள்ளது. வடகொரியாவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டால் தமது நாடு வாரந்தோறும் ஏவுகணை சோதனையை மேற்கொள்ளும் என்றும் அணுவாயுதத்தை பயன் படுத்தப் போவதாகவும் வட கொரியாவின் வெளியுறவு துணை அமைச்சர் அறிவித்த மறுநாள் சீனா அந்நாட்டை கடுமையாகச் சாடியுள்ளது. வடகொரியாவின் அண்மைய அணுவாயுத மற்றும் ஏவுகணை நடவடிக்கைகள் குறித்து சீனா கவலை அடைவதாக சீன வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் லு காங் கூறினார்.