சிங்கப்பூரில் நேற்று மிதமான புகைமூட்டம்

சிங்கப்பூரில் நீண்ட காலத்திற்குப் பிறகு நேற்று முன்தினம் மீண்டும் புகை மூட்டம் தலைதூக்கியது. நேற் றைய நிலவரப்படி 'பிஎஸ்ஐ' எனப்படும் காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீடு மிதமான அளவின் உச்சத்தைத் தொட்டது. சிங்கப்பூரின் தெற்குப் பகுதியில் நேற்று காலை 8 மணியளவில் காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீடு 95ஐ எட்டியது. அது பிற்பகல் 2 மணிக்கு 85ஆகக் குறைந்தது. சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் 'பிஎஸ்ஐ' குறியீடு 83 ஆகவும் வடக்கில் 80 ஆகவும் மத்திய வட்டாரத்தில் 77 ஆகவும் இருந்தது. மேற்குப் பகுதியில் மட்டும் காற்று தூய்மைக்கேட்டின் அளவு குறைந்து 59 ஆகக் காணப்பட்டது.

இருப்பினும் நேற்று பெய்த கனமழையால் சிங்கப்பூரின் பல பகுதிகளில் புகைமூட்டப் பிரச்- சினை குறைந்துள்ளது. காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 100ஐ தாண்டினால் அது சுகாதாரமற்ற காற்றின் நிலையைக் குறிப்பதாகும். அக் குறியீடு 51 முதல் 100 வரை யிருந்தால் மிதமான தூய்மைக் கேடுள்ள நிலையைக் குறிக்கும்.

கனமழையால் சாலையில் தேங்கிய மழை நீர் நேற்று பெய்த கனமழை காரணமாக சிங்கப்பூரின் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் போன்ற காட்சிகளைக் காண முடிந்தது. அப்பர் கிராஸ் ஸ்திரீட்டில் நீதிமன்றத்திற்கு வெளியே சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரைப் பிளந்தவாறு ஓடும் வாகனங்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!