புரிந்துணர்வை வலுப்படுத்தும் குறும்படங்கள்

சுதாஸகி ராமன்

சிங்கப்பூர் மக்களிடையே புரிந் துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு குறும்பட தொகுப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. தகவல் தொடர்பு அமைச்சால் நடத்தப்படும் 'புரோஜெக்ட் லாப்பிஸ் சாகு' திட்டத்திற்குக் கீழ் சிங்கப்பூரின் கலாசார பன்முகத் தன்மையையும் மக்கள் ஒன்று சேர்ந்து வாழ்வதையும் கருவாகக் கொண்ட 'Together Apart' எனும் இந்தக் குறும்படத் தொகுப் பில் கே.ராஜகோபால் உள்ளிட்ட மூன்று பிரபல உள்ளூர் திரைப்பட இயக்குநர்கள் இயக்கிய படங்கள் இடம்பெற்றுள்ளன. இதையொட்டி கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற போட்டிக்கு வந்த 1,200க்கு மேற்பட்ட கதை களிலிருந்து மூன்று கதைகள் தேர்வு செய்யப்பட்டன. தெமாசிக் பலதுறை தொழிற் கல்லூரியில் மின்னிலக்க திரைப்படத் துறையில் பயிலும் 19 வயது சான் லோவின் கதை, 'சஞ்ஜய்' எனும் குறும்படமாகத் தயாரிக்கப்பட்டு ராஜகோபாலால் இயக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!